சர்வதேச மாணவர்களை குறிவைக்கும் கனடா: கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
சர்வதேச மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், உட்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்வதினால் அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என கருத்து நிலவி வருகிறது.
கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா அரசு திட்டமிட்டுவருகிறது.

வீடுகள் பற்றாக்குறை
கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உட்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார்.
அதற்கு இவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் நாட்களில் சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு சிக்கல்கள் அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan