அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரளா மாணவி!
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவி மரியம் சூசன் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி , தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் வந்து அவர் மீது பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அவர் மீது தாக்குதல் நடத்தியவர் சூசன் வீட்டின் மேல்மாடியில் வசிப்பவர் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்து மாண்ட்கோமரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு உயிரிழந்த மரியம் சூசன் மேத்யூ கேரளா பத்தனம்திட்டாவில் உள்ள நிராணம் பகுதியைச் சேர்ந்தவராவார்.
சூசன் உயர் பள்ளிகல்வியை இந்தியாவில் கேரளாவில் படித்து முடித்த நிலையில்,இவர்களது குடும்பம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri