கொழும்பில் காணாமல்போயுள்ள தமிழ் மாணவன்! தாயார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் (VIDEO)
கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

தாயார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
கடந்த இரண்டு மாதங்களாக இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில்,மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் தாயாரின் தொலைப்பேசி இலக்கத்திற்கு 075-5100787 தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாணவனின் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன தொலைந்துபோனமை தொடர்பில் அவர் ஜூலை 10 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தாயார் தெரிவித்தார்.
இந்நிலையில்,கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் பஞ்சிகாவத்தை கால்வாய் பகுதிக்கு அருகில் அவரது அடையாள அட்டை கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவன் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் காணாமல்போயுள்ள மகளை தேடித்தருமாறும் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan