விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய மாணவன் கோர விபத்தில் சிக்கி பலி!
மொரகஹஹேன – ஹோமாகம வீதியின் யகஹலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத் து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரணை, மில்லேவ பகுதியைச் சேர்ந்தர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நண்பர் ஒருவரின் வீட்டில் மூன்று இளைஞர்களுடன் விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத் து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரகஹஹேன யகஹலுவ வளைவில் வீதியின் எதிர் திசையில் பயணித்த வாகனம் மொரகஹஹேனவில் இருந்து ஹோமாகம நோக்கி பயணித்த காருடன் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் காரின் முன் இடது இருக்கையில் பயணித்த 17 வயதுடைய மாணவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த விபத்தைத் தொடர்ந்து மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
