சர்வதேச ரீதியில் சாதனை படைத்த கந்தளாய் மாணவி
பெங்களூர் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், கந்தளாய் பேராறு தி/பரமேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவி செல்வி சாந்தரூபன் கீஷனா சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இரட்டை வாள் சுருள்
கடுமையான மற்றும் போட்டித்தன்மை மிக்க சுற்றுப்போட்டிகளில் தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் கலந்து கொண்ட கீஷனா, மூன்று பிரிவுகளில் பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் தனது திறனை நிரூபித்துள்ளார்.

குறிப்பாக, இரட்டை வாள் சுருள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், மொத்தமாக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி கந்தளாய் மண்ணிற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan