அநுர குறித்த சமூக ஊடகப் பதிவு - பல்கலைக்கழக மாணவர் மீது விசாரணை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைக் குறித்த குறிப்புகளையும், நிக்கவெரட்டியவில் “இரத்தக் களரி” ஏற்படக்கூடும் என்பது பற்றிய கூற்றுகளையும் கொண்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பாக, 21 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இன்று (13.10.2026) நடைபெற்ற அமைச்சரவைக்குப் பிந்தைய ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ, அந்த மாணவர் நிக்கவெரட்டியவில் உள்ள கொட்டவெஹர பொலிஸ் பிரிவில் வசிப்பவர் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அமைச்சரின் கூற்றுப்படி, அந்த மாணவர் அக்டோபர் 11 அன்று சமூக ஊடகங்களில், நிக்கவெரட்டிய ஒரு “இரத்தக் குளமாக” மாறும் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ஜனாதிபதி திசாநாயக்கவைக் குறிப்பிடும் ஒரு அறிக்கையும், குருநாகல் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்ற தகவலும் இடம்பெற்றிருந்தன.
இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகள் விசாரணைக்கு உகந்தவை என அமைச்சர் ஜெயதிஸ்ஸ தெரிவித்ததையடுத்து, பொலிஸ் விசாரணையை நடத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த மாணவர் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ரூ.500,000 பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மகிந்த மற்றும் ஷிரந்தியின் பெயரை வைத்து பிணை கோரிய நாமல் தரப்பு! செய்தியை தானும் பார்த்ததாகக் கூறி மறுத்த நீதவான்