யாழில் சோகம்: காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் (8) இரவு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் சிறீரங்கநாதன் மதுமிதா எனும் 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 7ஆம் திகதி மாணவிக்கு இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படட நிலையில் அன்றிரவே உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணை
யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
அதேசமயம் இறப்பிற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |