யாழில் டெங்கு நோய் தாக்கத்தினால் மாணவன் உயிரிழப்பு (Video)
யாழ்ப்பாணம் - மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.
மாணவன் 2 ஆயிரத்து 21 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காகக் காத்திருந்து மிகச் சிறந்த புள்ளிகளைப் பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிகத் திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam