உயர்தர மாணவன் மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி - பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவன், அங்கிருந்த மா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சகோதரிகள் இருவர் பாடசாலைக்கு சென்றுவிட, தாய் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
