சீனாவில் ஒரேவாரத்தில் நடத்தப்பட்ட மற்றுமொரு படுகொலை சம்பவம்: 8பேர் பலி
சீனாவில் ஒரு வாரக்காலப்பகுதிக்குள் நிகழ்ந்த மற்றுமொரு படுகொலை சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொழில்பயிற்சி கல்லூரி ஒன்றில் பயின்ற பழைய மாணவர் ஒருவர், நேற்று, கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த பழைய மாணவர், கத்தியை பயன்படுத்தியே இந்த கொலைகளை செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டமளிப்பு நிகழ்வு
சம்பவத்தின் போது அங்கு விரைந்த பொலிஸார் குறித்த பழைய மாணவரை கைது செய்துள்ளனர்.

பரீட்சை சித்தியெய்தமையால், பட்டமளிப்பு நிகழ்வுக்கு தாம் அழைக்கப்படவில்லை என்ற ஆத்திரமே, 21வயதான குறித்த மாணவரின் இந்த செயலுக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த திங்கட்கிழமையன்று, விவகாரத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தியில்லை என்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த 62 வயதான ஒருவர், காலை நேர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது வேண்டுமென்றே காரை செலுத்திய சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டு, 45 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan