அமெரிக்காவில் மாணவனிடமிருந்து வீடியோ கேம் கருவியை வாங்கிய ஆசிரியைக்கு நேர்ந்த கதி...!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் கற்றுவரும் மாணவனிடமிருந்த வீடியோ கேம் உபகரணத்தை ஆசிரியை வாங்கி வைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், பாடசாலை வளாகத்திலேயே ஆசிரியையை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
புளோரிடா மாநிலத்தில் பாம் கோஸ்ட் (Palm Coast) நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
அந்தச் சி.சி.டி.வி காட்சியில், வேகமாக ஓடிவந்து ஆசிரியையை மாணவர் தாக்கியதால், அவர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். எனினும், ஆத்திரம் குறையாத அந்த மாணவர், 15 முறைக்கு மேல் ஆசிரியை மீது கையால் ஓங்கி குத்துகிறார்.
மாணவன் கைது
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த மாணவனைக் கட்டுப்படுத்தி, தாக்குதலுக்குள்ளான ஆசிரியையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.