கிளிநொச்சியில் மாணவர்களுக்கான கண்ணிவெடி விழிப்புணர்வு சித்திரப் போட்டி
கிளிநொச்சியில் கண்ணிவெடி மற்றும் வெடி பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
வடமாகானத்திற்கான விஜயம் மேற்கொண்ட நீர்ப்பாசன வீடமைப்பு பிரதி அமைச்சர், இன்று (27.05.2025) பகல் மேற்படி மாணவர்களுக்கான பணப்பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.
வெற்றியீட்டிய மாணவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்தும் வகையிலும் மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையிலும் வெடி பொருள் அகற்றும் செயற்பாடுகள் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஆபத்தான பகுதிகளில் ஏற்படுகின்ற விபத்துக்கள் உயிரிழப்புகளை தவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு வேலைத்திட்டத்தின் ஒன்றாக பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பணப்பரிசசில் என்பன இன்று வழங்கி வைக்கப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri