சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு(Video)
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் நாளை(30.08.2023) அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் மட்டக்களப்பில் நடைபெறும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாக காணப்படுவதனால் இந்த போராட்டத்திற்கு அனைத்து உறவினர்களையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தமிழரசுக்கட்சி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை
இதேவேளை போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சி கட்சியின்
மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இணைந்த வடகிழக்கில் வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மற்றும் காணாமல்போன உறவுகளுக்கு குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனைத்து ஆசிரியர்களையும் ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்.உதயரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல ஆசிரியர்கள் கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டுள்ளதன் காரணமாக மட்டக்களப்பில் நடக்கும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களை ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
