தென்னிலங்கை சம்பவத்தை கண்டித்து வடக்கின் பல பகுதிகளில் போராட்டம் (Photos)
முல்லைத்தீவு
காலி முகத்திடல் போராட்டத்தில் இன்று ஏற்பட்ட வன்முறை செயலை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து கவனயீர்ப்பாக வைத்தியசாலை வாசல் வரை சென்று முல்லைத்தீவு முதன்மை வீதியில் தங்கள் கவனயீர்பினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது அகிம்சை போராட்டத்தினை அராயகமாக்கிய அரசே வெளியேறு, அரச பயங்கரவாதத்தினை எதிர்ப்போம் போன்ற அரசிற்கு எதிரான கோசங்களைத் தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
காலி முகத்திடலில் தன்னெழுச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு வன்முறையினை கையாண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் ஊழல் மிக்க அரசிற்கு எதிராகவும் நடக்கின்ற மக்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு அதில் கலந்து கொண்ட அப்பாவி பொது மக்களைத் தாக்குவது வேதனைக்குரிய விடயம்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலர் காயப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் அரசினால் மேலும் தொடருமானால் பல்வேறு இடங்களில் மேலதிகமான போராட்டங்கள் தீவிரமடையும்.
இதற்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்து நாட்டிற்குப் பொறுப்பு கூறக்கூடிய ஆட்சிமுறைமையினை விரைவில் கொண்டுவரவேண்டும்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
கிளிநொச்சி
தென்னிலங்கையில் இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 5.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் A9 வீதிவரை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பமான போராட்டம் இன்று பாரிய வன்முறைச் சம்பவமாக வெடித்துள்ளது.
கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட போராட்ட இடத்திற்கு வருகை தந்த குண்டர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு கலவரம் உண்டாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் பொதுச் சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
