அரசியல் தோற்றம் பெற்றதால் போராட்டம் தவறியது:உவிந்து விஜேவீர
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் 74 ஆண்டு ஊழல் மிகுந்த அரசியல் மற்றும் வயிற்று பிழைப்பு அரசியல் குறித்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
போராட்டம் இறுதியில் அரசியல் ரீதியான தோற்றத்தை பெற்றது.இதனால், போராட்டத்தில் தவறு ஏற்பட்டது. ஜனநாயக ரீதியாகவே அதிகாரத்தை கைபற்ற வேண்டும்.
நாடு புதிய பாதையை தேடுகிறது
மக்கள் புதிய மாற்றத்தை தேடுகின்றனர்.புதிய அரசியல் பயணத்தை தேடுகின்றனர். நாடும் புதிய பாதையை தேடுகிறது. இதனால், இரண்டாவது தலைமுறை என்ற எமது அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார நெருக்கடியை பார்த்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தது.
நாடு, கட்சிகளாகவும் வர்ணங்களாகவும் பிரிந்து கிடந்தது போதும்.சிகப்பு, நீலம் பச்சை நிறங்களுக்கு வாக்களித்தவர்கள் இருக்கலாம்.
தற்போது நாடு பற்றி சிந்தித்து கட்சி அரசியலை கைவிட்டு, புதிய மேடையில் இணைவோம்.பேதங்களை மறந்து இலங்கையர்கள் என்ற வகையில் தேசிய வேலைத்திட்டத்திற்காக மக்களை அணித்திரட்டுவோம் எனவும் உவிந்து விஜேவீர கூறியுள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
