கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு! (Video)
வலிகாமம் வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராகக் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்வதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், “எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் இனத்துக்காகவும் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பை இதன்போது விடுக்கின்றோம்.
கடந்த மாதம் காணி சுவீகரிப்பு தொடர்பாக காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்ற
வருகின்றமையால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

காணி விடுவிப்பு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்
மேலும், வலிகாமம் வடக்கு காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நாளை காலை 10 மணியளவில் எமது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரையும் கட்சி, பேதமின்றி இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுக்கின்றது” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த ஊடக சந்திப்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ. விஜயகுமார், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். றொபின், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சி.ஜெல்சின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 15 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri