கோட்டாகோகம கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது! நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவிப்பு
கொழும்பு - காலிமுகத்திடலில் உள்ள கோட்டாகோகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் குறித்த கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.
| பொலிஸாரின் தொடர் எச்சரிக்கைக்கு மத்தியில் ஜனாதிபதியுடன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்திப்பு |
மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
பொலிஸாரின் தொடர் அறிவிப்பு
இந்த நிலையில் போராட்டக்கள பகுதிக்கு நேற்றைய தினமும் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
இதேவேளை மீண்டும் இன்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| பொலிஸாரின் அறிவிப்பை பொருட்படுத்தாத சில போராட்டக்காரர்கள்! போராட்டக்களத்தின் தற்போதைய நிலவரம் |
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam