சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்கு சைவ மகாசபை கடும் கண்டனம்

Sri Lankan Tamils Parliament of Sri Lanka Sarath Weerasekara
By Theepan Jul 10, 2023 11:04 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மோசமான இன மத துவேசத்துடனான நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் குருந்தூர் மலை சட்டவிரோத நீதிமன்ற உத்தரவை மீறிய கட்டுமானத்தை பார்வையிட முல்லைத்தீவு கௌரவ நீதிபதி களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.

அந்த வேளையில் இவ் வழக்குடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத கொழும்பு மாவட்ட எம்பியான சரத் வீரசேகர தனது குழுவினருடன் குருந்தூரில் பிரசன்னமாகி இருந்தார்.

வழக்குடன் தொடர்புபடாத வெளிநபர்கள் சம்பவ இடத்தில் கருத்துகளை தெரிவிப்பதை நீதிபதி தவிர்க்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தன் பேரினவாத அடக்குமுறை சித்தாந்தத்தை பிரதிபலித்து மிக மோசமாக நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர உரையாற்றி உள்ளார்.

மோசமான இனவாதம்

தமிழ் நீதிபதி என விளித்து அச்சுறுத்தும் எச்சரிக்கை வசனங்களை குறிப்பிட்டமை மிக மோசமான இனவாதம் ஆகும். அது மட்டுமன்றி நீதிமன்றத்தின் உயரிய மாட்சிமைக்கு பங்கம் விளைக்கும் அதி தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்த வழிகோலுகின்ற வகையில் அமைந்திருக்கின்றது.

சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்கு சைவ மகாசபை கடும் கண்டனம் | Strongly Condemns Sarath Weerasekara Comments

மேலும் ஆதி காலம் தொட்டு தமிழர்களால் வழிபடப்பட்டு வந்த ஆதி சிவன் கோவிலின் திரிசூலம் பற்றியும் மிகத்தவறான கருத்துக்ளை பதிவு செய்துள்ளார்.

இங்கு ஆயிரம் வருடங்களிற்கு முன்னதாகவே மிகத் தொன்மையான ஆதி சிவன் கோவில் அமைந்திருந்தையும் மிகப் பெரிய ஆவுடையார் உள்ளிட்ட சிவலிங்க பாகங்கள் நந்தி போன்றன மீட்கப்பட்டு இருந்ததையும் மேனாட்டு தொல்லியல் அறிஞர்களான எச். பி.பெல், லூயிஸ் ஆகியோர் கடந்த நூற்றாண்டிலேயே அகழ்வாராய்ச்சிகளுடன் உறுதிப்படுத்தி இருந்தனர்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல்

இந்நிலையில் இன்றும் முற்றிலும் சைவத்தமிழர் வசிக்கும் இடத்தில் அவர்களின் வழிபாட்டுரிமைக்கு சவால் விடும் செயற்பாடுகளில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அடாவடியாக ஈடுபட முனையும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகராவிற்கு நீதிமன்ற உத்தரவுகள் விசனத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

அதன் வெளிப்பாடே நாடாளுமன்ற சிறப்புரிமையை அவமதித்து செய்து நீதிபதியை இனவாத நோக்கில் அச்சுறுத்தும் வார்த்தை பிரயோகம் அடங்கிய அவரது உரையாகும்.

இன மத நல்லிணக்கத்தையும் உயரிய நீதிமன்ற மாண்பையும் காக்கும் வகையில் நாட்டின் சகல முற்போக்கு சக்திகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுவதுடன் இதற்கு தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாகவும் நீதிமன்ற மாண்பை மதிக்கும் நாட்டின் பிரஜைகள் சார்பாகவும் வேண்டி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US