அரச அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு: பொலிஸார் குவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணியின் போது அரச அச்சகத்திற்கு அதிக பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் போது அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விட இம்முறை அதிகளவு பாதுகாப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரச அச்சக வளாகத்தில் இரவு பகலாக 65 பொலிஸார் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகள்
இதற்கமைய, பகலில் 30க்கும் மேற்பட்ட பொலிஸாரும், இரவு பணியில் 30க்கும் மேற்பட்ட பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 300க்கும் மேற்பட்ட வேலைகள் அரச அச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அச்சகத்தின் வெளிப்புற பாதுகாப்பையும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்கள் இந்த நாட்களில் அச்சிடப்படும் என்றும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஏனைய அச்சுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |