மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்த இடமளிக்க முடியாது! பிரமித்த பண்டார தென்னக்கோன்
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்பட முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் நாச வேலைகளில் ஈடுபடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை
நாட்டில் புதிய தலைவர், புதிய அரசாங்கம் தற்பொழுது ஆட்சி நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சில தரப்பினரின் செயற்பாடுகளினால் நாடு இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் எதிர்காலத்தில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.