எதிர்வரும் வாரத்தில் போராட்டம்: எச்சரிக்கும் அரச ஊழியர்கள்
இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் வாரத்தில் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரசாங்க மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்க ஒன்றிய அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாதாந்த சம்பளம் 20000 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் பிரதான கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்படும் தொழிற்சங்கங்கள்
மேலும், தொழிற்சங்கங்களை ஒடுக்குதல், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒழுக்கவிதிகள் சட்டம் போன்றவற்றை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுபடுத்திய போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam