நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் முடங்கிய பல துறைகள்
சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரால் இன்றைய தினம் (08.02.2023) பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட குறித்த எதிர்ப்பினால் பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று காலை 8 மணி முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததால் வைத்தியசாலைகளின் மருத்துவ மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் முற்றாக முடங்கியிருந்தன.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவில்லை.
பல துறைகள் முடக்கம்
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு வந்த மக்களும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய அலுவலகங்கள் இன்று மூடப்பட்டுள்ளதாகவும், மின்சாரத் தடைகளை மீளப் பெறுவதற்கான சேவைகள் வழங்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக துறைமுகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இன்று காலை 10.30 முதல் சேவையை விட்டு விலகி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளித்தது.
நாடளாவிய ரீதியில் பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர்கள் சுகயீன விடுமுறை அறிவித்துள்ளதுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று தமது கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
