சாரதிகளுக்கு எதிராக கடுமையாக்கப்படும் சட்டம்! - பொலிஸார் விசேட அறிவிப்பு
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கவனமாகவும், போக்குவரத்து விதிகளுக்கு இணங்கவும் வாகனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது எனவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இது தொடர்பில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அனைத்து சாரதிகளும் போக்குவரத்து விதிகளை மீறாத வகையில் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
