வடமேல் மாகாண ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
வடமேல் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே(Raja Kollure) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டுகளுக்கு பின்னர் பாடசாலைகளை திறக்கப்படும் நிலையில் பாடசாலைகளுக்கு வருகை தராத ஆசிரியர்கள், அதிபர்களின் நவம்பர் மாத சம்பளங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் திறக்கப்படும்ட 21ம் திகதியே ஆசிரியர்களும் அதிபர்களும் வருகை தர வேண்டுமெனவும், எதிர்வரும் 25ம் திகதியே வருகை தருவார்கள் என்ற தொழிற்சங்கங்களின் தீர்மானத்தை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறப்பதற்கு எதிராக செயற்டுபவர்கள் ராஜதுரோக, மக்கள் துரோக செயல்களில் ஈடுபடுபவர்களாக கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை திறப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் போது சம்பளம் வழங்கப்பட வேண்டியதில்லை எனவும் தாம் ஓர் சட்டத்தரணி என்பதனால் இது தமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri