இலங்கையில் நீக்கப்பட்ட கட்டாய நடைமுறை! வெளிவிவகார அமைச்சுக்கு சென்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு
பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகாநாயக்க தேரர்களின் அனுமதியைப் பெறும் கட்டாய நடைமுறை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் 22 பிக்குகள் அண்மையில் கைதாகியிருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிக்குகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்! இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம் - நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
கட்டாய நடைமுறை
கைது செய்யப்பட்ட பிக்குகள் குழுவினர், மகா நாயக்க தேரர்களின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி தாய்லாந்திற்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் எழுத்து மூல அனுமதியை பெறும் கட்டாய நடைமுறையை அரசாங்கம் அண்மையில் நீக்கியிருந்தது, இதுவே இவ்வாறான குற்றச்செயல்கள் நடப்பதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் காமினி சேனாரத்ன, பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு மகா நாயக்க தேரர்களின் அனுமதியைப் பெறும் நடைமுறை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் குறித்த கட்டுப்பாட்டு முறையை மீண்டும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மகா நாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையைத் நாம் வெளிவிவகார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam