எதிர்வரும் வாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள்! வெளியாகியுள்ள தகவல்
பயணத்தடை தளர்த்தப்பட்ட பின்னர், கடந்த மூன்று நாட்களில் மக்களின் நடத்தை திருப்திகரமாக இல்லை என்று கூறப்படும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் மக்களின் நடத்தை பொறுப்பின்றி தொடர்ந்தால் அதிகாரிகள் மேலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது மக்கள் சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டனர் என்று கூறினார்.
நாள்தோறும் 2000 தொற்றுக்கள் கண்டறியப்படும் நிலையிலும், கட்டுப்பாடுகள் மேலும் நீக்கப்படும் என்பதால், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பதில் மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.
வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மக்களின் பொறுப்பான நடத்தை முற்றிலும்
முக்கியமானது என்றும் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
