ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்ய நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போதைக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கோட்டாபய அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேர் தற்போதைக்கு ஆறு வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக 13,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
புதிய வழக்குகள்
குறித்த வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தின் மூன்று விசேட நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் அமர்வின் முன்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக தகவல்களை மறைத்தல், விசாரணைகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் பல புதிய வழக்குகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
