வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இடம்பெறும் அநீதி! கோட்டாபய பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதும், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும்போதும் அதற்கென பெருமளவு பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ள போதே சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதும், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும்போதும் அதற்கென பெருமளவு பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்க்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த அறிவுறுத்தலுக்கமைய ,எந்தவொரு விடயத்திலேனும் தவறுகள் இடம்பெறுவது குறித்து யாரேனும் சுட்டிக்காட்டினால், அவற்றை உடனடியாகத் திருத்திக் கொள்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் மற்றும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் தொடர்பான தரவுகள் ஒருபோதும் திட்டமிட்ட வகையில் மாற்றப்படவில்லை.
மேலும்,அவ்வாறு மாற்றப்படுகின்றதென எவரேனும் கூறினால், அதனைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri