வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
கொத்மலை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களுக்குள் கிடைக்கும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பொலிஸ் அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் அந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்தாத வழக்குகளையும் தாம் விசாரிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் கொத்மலை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
