ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் உரிய வகையில் பின்பற்றாதுபோனால் கடும் நடவடிக்கை
கோவிட் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை பொதுமக்கள் உரிய வகையில் பின்பற்றாதுபோனால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படு;ம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸை கட்டுப்படுத்தாமைக்காக சுகாதார திணைக்களம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் சுகாதார திணைக்களத்தினாலோ அல்லது படையினராலோ கோவிட்டை கட்டுப்படுத்த முடியாது.
சுகாதார திணைக்களத்தால் 2 கோடி சனத்தொகையையும் கண்காணிக்க முடியாது. அவர்கள் உரிய சுகாதார பழக்கவழங்கங்களை பின்பற்ற வேண்டும்.
அதனை அவர்கள் உரியவகையில் பின்பற்றாதுபோனால் ஒழுங்குவிதிகளை இறுக்கமாக்கவேண்டியேற்படும்.
எனவே பொதுமக்கள் கடுமையான சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



