கடவுச்சீட்டு வழங்குவதை வலுப்படுத்த தயாராகும் அரசாங்கம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கடவுச்சீட்டு
தற்போதைய கடவுச்சீட்டு வழங்கும் பொறிமுறையைப் புதுப்பித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடவுச்சீட்டு வழங்கலின் வேகத்தை உறுதி செய்தல் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மிகவும் வசதியான சேவையை வழங்குவதில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan