இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள்: பங்கேற்கவுள்ள இலங்கை பிரபலங்கள்
இந்திய சுற்றுலா பயணிகளை இலக்காகக்கொண்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் பாடகி யொஹானி டி சில்வா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அடுத்த வாரம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீதிக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
வீதிக் காட்சிகள்
முதல் வீதிக் காட்சி செப்டெம்பர் 26 ஆம் திகதி புதுடில்லியில் உள்ள தாஜ் பேலஸ் உணவகத்தில் நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து செப்டெம்பர் 28 ஆம் திகதி மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் உணவகத்திலும் செப்டெம்பர் 30, 2022 அன்று ஹைதாராபத் தாஜ் கிருஸ்ணா உணவகத்திலும் வீதிக் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
இந்த வீதிக் காட்சிகள் மூலம், இலங்கையின் சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதே நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வு

இந்தநிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட உள்ளூர் பயண முகவர் மற்றும் உணவகங்களின் பிரதிநிதிகள் இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை இந்த நிகழ்வுகளின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் பல உயர் வணிகத் தலைவர்கள், சுற்றுலாப் பங்குதாரர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை முன்னணி இந்திய ஊடக நிறுவனங்களுடன் பல ஊடக நேர்காணல்களிலும்
அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam