இலங்கை வரும் நரேந்திர மோடி! அநுராதபுரத்தில் அகற்றப்படும் தெரு நாய்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
விலங்கு மக்கள் தொகை முகாமைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இலங்கை வருகிறார் நரேந்திர மோடி
ஏப்ரல் முதல் வாரத்தில் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இதன்போது, ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தவும், இலங்கை தொடருந்து துறையின் கீழ் இந்திய அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்கவும் அவர் அநுராதபுரம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டே தெரு நாய்களை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களுக்கு தடுப்பூசி
இந்த நிலையில், அநுராதபுரத்தில் நகராட்சி மன்றத்தின் ஆதரவுடன் ஐந்து வருட செயல்பாட்டுத் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam