2024 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க சம்பிக்க வியூகம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறியுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
43 ஆம் படையணி

43 ஆம் படையணி எனும் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, ஆரம்பத்தில் புத்திஜீவிகளை உள்வாங்கிய சம்பிக்க ரணவக்க, தற்போது அரசியல் பிரமுகர்களையும் இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான பேச்சுக்கள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன என்று கட்சி பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தல்
2024 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே,
சம்பிக்க இவ்வாறான நகர்வில் இறங்கியுள்ளார் என அரசியல் களத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.  
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        