பேஜர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உத்தி! மொசாட் தரப்பு பகிரங்கம்
கடந்த ஆண்டு செப்டம்பரில் லெபனானில் பலரை கொன்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்திய கொடிய பேஜர் தாக்குதல்கள், தொடர்பில் மொசாட் தரப்பு அதன் பின்னணியை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த போரின் ஆரம்பத்தில் ஹிஸ்புல்லா சமாதான நிலையை வெளிப்படுத்தியிருந்தால், இந்த விளைவு ஏற்பட்டிருக்காது என்றும் மொசாட் தரப்பு கூறியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மொசாட் தலைவர் டேவிட் பார்னியா,
பேஜர் சாதனங்கள்
செப்டம்பர் 17-18, 2024 அன்று, பேஜர் சாதனங்கள் மற்றும் வாக்கி - டோக்கிகள் வெடித்ததில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்தனர்.
இதில் பலர் ஊனமுற்றனர். இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தவர்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட செப்டம்பரில் ஹிஸ்புல்லா போராளிகளால் பயன்படுத்தப்பட்ட பேஜர் சாதனங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருந்தது.
இதனால் இஸ்ரேல் பேஜர் களைப் பயன்படுத்தி தாக்குதலைத் திட்டமிடத் தொடங்கியது,
உளவுத்துறை தகவல்கள்
ஆனால் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பேஜர்கள் ஹிஸ்புல்லா போராளிகளின் உடல்களுடன் இணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த பிறகு அவற்றில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்ப்பட்டது.
ஹமாஸ் தலைமையிலான ஒக்டோபர் 7, 2023 தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு 500 பேஜர்களைக் கொண்ட முதல் தொகுதி லெபனானுக்கு அனுப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி பல ஆண்டுகளாக நெருக்கமான மற்றும் தனித்துவமான உளவுத்துறை தகவல்களை நாங்கள் சேகரித்தோம்
பேஜர் தாக்குதல்களை தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரண்டு மாத கால முழுமையான போராக மாறி லெபனான் குழுவை கடுமையாக பலவீனப்படுத்தியதன் தொடக்கத்தைக் குறித்தது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri
