ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு : பதற்றத்தில் உலக நாடுகள்
அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' இனி அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஈரானிய படையினர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்னர்.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்கும் மூடப்படுகிறது என அறிவித்துள்ளது.
இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல்
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவாகவும் விதிகளையும் மீறி இந்த நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோதல் சூழல் இருப்பினும், ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளைகம் (CENTCOM) மறுத்துள்ளது. வணிகக் கப்பல்கள் தொடர்ந்து இந்த நீரிணை வழியாகப் பயணித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் இந்த கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக "சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற" இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம்
ஹோர்முஸ் பகுதியில் ஈரானிய கடற்படை பிரிவுகளுக்கும் அமெரிக்க படைகளுக்கும் இடையே "நேரடி மோதல்" ஏற்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் "கடுமையான தாக்குதலைக் கண்டு" அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியடைந்ததாகவும் அது கூறியுள்ளது. ஆனால், தங்களது எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே இப்பகுதியில் நீடித்து வரும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாகவே இந்த முக்கிய கடல்வழிப் பாதை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது.
இந்த மோதல் தீவிரமடைந்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பல மடங்கு உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
you may like this