ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஒத்திவைக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான முக்கியத் தீர்மானத்தின் மீதான ஐநா பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 3-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி காலை 11:00 மணிக்கு (ஜிஎம்டி 15:00) இந்த வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், ஐநா இணையதளத்தில் இருந்து அந்த நிகழ்ச்சி நிரல் நீக்கப்பட்டிருந்தது.
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்
இது குறித்து பிபிசி (BBC) செய்தி நிறுவனத்திற்கு விளக்கமளித்த ஐநா செய்தித் தொடர்பாளர், பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் முடிவின்படி இந்த வாக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தீர்மானத்தின் மீதான முடிவு சர்வதேச வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்