நாட்டில் பரவும் ஆபத்தான வைரஸ் திரிபுகள்! இன்று ஆரம்பமாகும் பரிசோதனை
நாட்டில் பரவி வரும் கோவிட் வைரஸ் திரிபுகளின் மரபனு பகுப்பாய்வு நடவடிக்கை இன்று ஆரம்பமாக உள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
தொற்று நோயியல் பிரிவு வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரிசோதனையின் அறிக்கைகள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு பிரிவின் இயக்குனர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட ஆபத்தான டெல்டா திரிபு இலங்கையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகளை வைத்த இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 9 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan