திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Bavan Aug 24, 2026 09:18 AM GMT
Report

அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன வரிசையிலும் தமிழீழ போராட்ட வரலாற்றில் முதல் 1985 ஒகஸ்ட் 24ஆம் திகதி விடுதலை இயக்கங்களுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அப்பாவி விவசாயிகள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டு கிராமமே அழிக்கப்பட்டு வெளி உலகிற்கு வெளிவராது போன வரிசையிலும், தமிழர் இன அழிப்பின் ஆரம்ப புள்ளி வயலூர் கிராமம்.

என்பதுடன் இந்த இனஅழிப்பின் 41 வருட நினைவு தினம் 24.08.2006 திங்கட்கிழமை ஆகும். திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள சாகமத்திலிருந்து தெற்கு பக்கமாக 8 மையில் தொலைவில் வயலூர் கிராமம் 1972ஆம் ஆண்டு காணியற்ற வறிய மக்கள் 200 குடும்பங்களை குடியமர்த்தப்பட்ட ஒரு கொலனியாக இருந்தது.

அரசாங்கம் அக்கால பகுதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மரவள்ளிக் கிழங்கும், குரக்கனும் சாப்பிடுமாறும், உணவு விடுதிகளில் சோறு சமைக்கக் கூடாது என கேட்டுக் கொண்ட காலப்பகுதியில் இக்கிராமம் உணவு மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை அபிவிருத்திக்காக அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டது.

உணவு பஞ்சம் வந்தும் இடம்பெயராத மக்கள்

இந்த கிராமத்தை அடைவதற்கு சாகமத்திலிருந்து காட்டு வழிபாதை மட்டும் உள்ளதுடன் நான்கு சக்கர உழவு இந்திரங்கள் மாட்டுவண்டிகள் என்பவை விவசாயத்துக்கான உள்ளீடு மற்றும் உற்பத்திகளை ஏற்றிச் செல்வதற்கு உபயோகிக்கப்பட்டன, அதேவேளை ஏழைகள் வழமையாக இந்த தூரத்தை நடந்து சென்று வந்தனர்.

இவர்கள் தடிகள், களிமண், ஓலை புல்லுகளினால் தமது இருப்பிடங்களை அமைத்து குடியமர்தப்பட்ட இவர்களுக்கு சுத்தமான குடிநீர், கடைகள் என்பன இருக்கவில்லை.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மலேரியா மற்றும் நீரிலான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டதுடன், தமது வைத்திய சேவையை பூர்த்தி செய்ய 10 மையிலுக்கு அப்பால் அக்கரைப்பற்றுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இருந்தபோதும் தமது விவசாயமான சோளம், குரக்கன், மரவள்ளி போன்ற பயிர்களை தொடர்ந்து பயிர் செய்துவந்ததுடன், அவர்களது ஆடுகள், கோழிகளை நரிகள், சிறுத்தைகள், திருடிச் சென்ற அதேவேளை, காட்டுப்பன்றிகள் பயிர்களையும் நாசம் செய்தன.

ஆயினும் அவர்கள் இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அடிப்படை வசதிகளற்ற கிராமம்

இத்தகைய ஒரு சமூகம் தான் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டது, இந்த யுத்த நிறுத்தம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜயவர்தனா தலைமையிலான அரசாங்க குழுவும் (ரி.யு.எல்.எப்) தமிழர் விடுதலைக் கூட்டணியிலான விடுதலை இயக்கங்களான தமிழ்ழீழ விடுதலைப்புலிகள், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ். ரெலோ ஆகிய 5 இயக்கங்களுக்கும் இடையிலான திம்புவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயம், இராணுவப் படைகள் வகை தொகையின்றி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தன.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

1985ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை வேளை வயலூர் மக்கள் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 40 பேர் படுகொலை செய்யப்பட்டன, இவ்வயலூரின் தாக்குதலில் விதவையாக்கப்பட்ட பெயர் குறிப்பிடாத 5 பிள்ளைகளுக்கு தாயாரானவர், “ இராணுவத்தினரின் வெறியாட்டத்தில் எனது கணவர் கொல்லப்பட்டார்” என்றார்.

இராணுவத்தினரின் அட்டூழியங்கள்

அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் வயலூரில் கிழங்கு, மாப்பொருட்கள், மரக்கறி வகைகள். பழமரங்கள் செய்கைபண்ணி வாழ்ந்துவந்தோம், ஆனால் எங்களுக்கு சுத்தமான குடிநீர்,கடைகள், பாடசாலை, வைத்தியசாலை இருக்கவில்லை. 1985.08.24ஆம் திகதி அதிகாலை 6 மணியளவில், நான் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு தொகை மனிதர்கள் துப்பாகியுடன் எமது குடிசைகளை சுற்றி நின்று கொண்டிருப்பதை அவதானித்தேன் . நான் பீதியடைந்து வந்தவர்களைக் கண்டு மிகப்பயத்தில் நடுங்கினேன், நான் பதற்றப்பட்டிருப்பதை கண்டுகொண்ட அவர்கள் என்னை நெருங்கி சிங்கள மொழியில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

எனக்கு அவை விளங்கவில்லை, அப்பொழுது எனது கணவர் வந்ததால் நட்புணர்வு சைகைகளை காட்டி நாங்கள் தண்ணீர் கொண்டுவரும் வாளியை எடுத்துக் கொண்டு தங்களுடன் வருமாறு கேட்டனர்.

காட்டு வழிப்பாதையில் சென்ற மக்கள்

எனது கணவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.

குடிசைகளுக்குள் புகுந்து அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் யாவரையும் வெளியில் கொண்டதுடன் வயோதிபர் நோயாளிகள் என்போரை அப்பால் செல்லுமாறு கூறினர்.

பின் உடல் ஆரோக்கியமான இளைஞர்கள் அனைவரையும் தம்மோடு அழைத்துச் சென்றனர் இதில் பெண்களும் அடங்குவர். அங்கிருந்து கிழக்கு திசையாகக் காட்டுப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம்.

இராணுவச் சிப்பாய் ஆண்களை அழைத்து தமது காலை ஆகாரத்திற்கு முகம் கழுவுவதற்கு நீர் கொண்டுவருமாறு கேட்டனர். அப்பொழுது காலை 8 மணியிருக்கும் அவ்வாறே ஆண்கள் தண்ணீர் கொண்டு வந்ததும் சிப்பாய்கள் தமது காலை ஆகாரத்தை சாப்பிட்டனர்.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

ஆனால் நாங்கள் பட்டினியாக இருந்தோம் ஒரு கோப்பை தேநீர் கூட கிடைக்கவில்லை, அவர்கள் தமது காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டதும் எல்லோரையும் தம்மோடு வருமாறு கூறினர், ஆனால் எங்கே என்று கூறவில்லை.

அவர்கள். கட்டளைக்கு இணங்கி நாங்கள் காட்டுவழிபாதை ஊடாக சென்றோம், அப்பொழுது மற்றுமொரு இராணவ சிப்பாய்க் குழு ஒன்றை சந்தித்தோம். அந்த குழுவிற்கு தலைமை தாங்கிய உத்தியோகத்தர் ஆண்களுடன் பெண்களை அழைத்து வந்ததை பிழையெனக் கண்டுகொண்டார்.

இரண்டாது குழு தலைவர் பெண்களிடம் வந்து தமிழிலே பேசினார் அவர் கூறும்போது, “ நீங்கள் ஆண்களுடன் வரவேண்டியதில்லை இராணுவ வீர்கள் தமக்கு அறிமுகமற்ற பகுதியில் இருக்கின்றனர். எங்களுக்கு ஆண்கள் தேவை அந்த மரத்தின் கீழ் சென்று மதியம் வரை காத்திருங்கள், ஆண்கள் திரும்பிவருவார்கள்” என்றார்.

கிராமத்து ஆண்களுக்காக காத்திருந்த பெண்கள்

நாங்கள் அந்த மரத்தின் கீழ் காத்திருந்தோம் அவர்கள் குமரன் குளத் திசையில் சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஆண்கள் திரும்பிவரவில்லை சூரியகதிர் தலையை சுட்டெரிந்தன எமது ஆண்கள் திரும்பிவரும் அறிகுறி எதுவும் தென்படவில்லை.

வீட்டில் இருக்கும் எமது குழந்தைகளுக்காகவும் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எமது ஆண்களுக்காகவும் உணவு சமைக்க வேண்டியிருந்தது.

எங்கள் குடிசைகளுக்கு திரும்பி வந்து உணவு சமைப்பதில் ஈடுபட்டோம் அப்பொழுது கொலை செய்தி வந்தது இந்த செய்தியை கொண்டுவந்தவர் உயிர் தப்பி வந்தவர் ஏனையவர்கள் குமரன் குளப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டு கிடக்கின்றனர் என கூறினார்.

இவ்வாறு நடந்த செய்தியை கேட்டு நாங்கள் அனைவரும் பாதுகாப்புக்காக உடுத்த உடையுடன் நடந்து சென்று திருக்கோவில், பனங்காடு, அக்கரைப்பற்று பிரதேசங்களில் உள்ள உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தோம். அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களை வயோதிபர்கள் அந்த இடத்துக்கு சென்று சடலங்களை பூர்விக கிராமத்துக்கு கொண்டுவந்து உரிய மரணச்சடங்குடன் புதைக்கப்பட்டனர்.

வயலூரில் எங்களின் சொத்துக்கள் யாவற்றையும் இழந்தோம். கே. வேலுப்பிள்ளை என்பவர் தனது 2 மகன்களான குழந்தைவேல் ஜெயகாந்தன்,(22) நாகலிங்கம்(22) மருமகன் சின்னவன் கந்தசாமி(30) தனது மூத்த சகோதரன் தம்பிப்பிள்ளை மாமா ஆன ஏரம்பு என்பவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் சொன்ன செய்தி

படுகொலையின் போது உயிர் தப்பிய வர்த்தகரான வைரமுத்து கனகசபை பின்வருமாறு கூறினார்,

“அடிக்கடி வியாபார நிமித்தம் வயலூருக்குச் செல்லும் நான் 23ஆம் திகதி பிற்பகல் 2 மாடுகள் பூட்டிய மாட்டுவண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு திருக்கோவிலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தைக்காக பொருட்களை கொண்டுவர வயலூருக்கு போயிருந்தேன்.

அன்றிரவு மரவள்ளி கிழங்குகளை பிடுங்குவதற்காக அங்கு தங்கிருந்தேன் 24ஆம் திகதி காலை அப்பகுதியை விட்டு புறப்படும் போது அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் இராணுவம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. நான் விவசாயிகளுடன் ஒரு குடிசையில் இருந்தேன்.

நான் கைது செய்யப்பட்டாலும், பின் விடுவிக்கப்பட்ட போது நான் எடுத்துச் சென்ற பணமும் சைக்கிளும் காணாமல் போயிருந்தது. இராணுவத்தினர் என்னை செல்லுமாறு சொன்னதால் நான் சென்றேன் ஆனால் குமரன் குளப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடத்தில் மறைந்திருந்தேன்.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

சிறிது நேரத்தில் துப்பாகி வேட்டுக்கள் கேட்டன பின் இராணுவத்தினர் தமது வாகனத்தில் சென்ற பின்பு நான் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபொழுது அவர்கள் சுடப்பட்டு இறந்து கிடந்தார்கள்.

ஆயினும் இரு விவசாயிகள் காயத்துடன் கிடந்தனர், ஒருவருக்கு வாய்க்குள் துப்பாகி வைத்து வெடிவைக்ப்பட்டுள்ளது. இவர் இறக்கவில்லை மற்றவரின் பெயர் நடராஜா நான் இந்த செய்தியை வயலூருக்கு சென்று கூறினேன்” என்றார்.

40க்கும் மேற்ப்பட்டோர் படுகொலை

இந்த சம்பவத்தின் போது, 40 க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கனகசபை உறுதிப்படுத்தினார். வயலூர் கிராம விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு 23 வருடங்களின் பின்பு 2008ஆம் ஆண்டு தான் முதல் முதலாக இப்படுகொலை பற்றி வெளியுலகிக்கு கொண்டு வர முடிந்தது.

இருந்தபோதும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அரசுடன் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினரால் பௌத்த கோட்பாடு அடிப்படையில் வயலூர் கிராமம் தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன், இது ஒரு கிராமத்தையே அழித்த கறைபடியாத படுகொலையாகும். இந்த கிராமம் காடுகளாகி விட்டது.

திம்பு பேச்சுவார்த்தையின் போது அழிக்கப்பட்ட தமிழ் பகுதி கி்ராமம் - திரைப்படப் பாணியில் இராணுத்தினர் நடத்திய வேட்டை | Story Of Village Destroyed By Military In Ampara

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான பேச்சுவார்த்தையின் போது முதல் முதல் நிகழ்ந்த ஒரு படுகொலை என்பதுடன் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான படுகொலைகள் மூலம் பேரினவாத அரசு தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரை தங்கவேலாயுதபுரம், பெத்துவில், குண்டுமடு, அக்கரைப்பற்று, திராய்க்கேணி, வீரமுனை, சென்றல்காம், மல்வத்தை, அம்பாறை நகர், காரைதீவு, கல்முனை, நிந்தவூர் போன்ற தமிழ் கிராமங்கள் இராணுவத்தினராவும் ஊர்காவல்படையினராலும் சுற்றிவளைத்து சிறுவர், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது வாழ்விடங்கள் தீ வைத்து எரித்து உடைத்து அழித்தனர். இவ்வாறு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன.

மனித உரிமைக்காக உயிரை கொடுத்தவர்கள்

இருந்தபோதும் அந்த அழிக்கப்பட்ட வரலாறுகள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை இதனால் தற்போதைய சமூதாயத்துக்கு தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்களுக்கு நடந்த படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் அந்தந்த காலத்தில் அதற்கான நினைவேந்தல்களை செய்யவேண்டும் என்பது தமிழ்களின் கடமையாகும்.

இருந்த போதும். தமிழ் இன அழிப்பின் ஆரம்ப புள்ளியாக இந்த மாவட்டத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புக்களை பறைசாற்றி நிற்கின்றது. என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US