இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள் - வெளிவரும் பல கொலை திட்டங்கள்
டுபாயில் ஹோட்டலில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட பாதாள உலகத்தலைவர் லலித் கண்ணங்கரா என்ற பஸ் லலியாவின் பல கொலைகள் திட்டங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டுபாயில் பதுங்கியிருந்த போது இலங்கையில் பல குற்றங்களை செய்ததாகவும், ஹங்வெல்ல, ஹோமாகம, அவிசாவளை மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மக்களை அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்
மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச தலைமையிலான குழுவினர் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவரான 'பஸ் லலித்' (லலித் கண்ணங்கார) என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை அழைத்து வருவதற்காக டுபாய்க்கு சென்றுள்ளனர்.

இதற்கமைய, நாளை (25 ஆம் திகதி) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'பஸ் லலியா' என்ற பெயருடைய இந்த சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, ஹன்வெல்ல, மீகொடா, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் தங்கள் வீடுகளை விட்டு ஏனைய பகுதிகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த நபருக்கு பணம் கொடுக்கப்படாததால், தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவருக்கு பணம் கொடுக்காத சுமார் பதினைந்து தொழிலதிபர்களும், எதிர்ப்பாளர்களும் அவராலும் அவரது உறுப்பிர்களாலும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், லலித் கண்ணங்கரா வேலையில்லாமல் இருந்தபோது, அவருக்கு பேருந்து நடத்துனர் வேலை கொடுத்து, பணம் செலுத்தாத நபரை தன் வீட்டில் தங்க வைத்தவரை லலித் கண்ணங்கரா சுட்டுக்கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள பல குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைக
வெளிநாட்டில் உள்ள மேலும் பல குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபரை தவிர, பாதாள உலகத்தலைவர்களான கொண்ட ரஞ்சி, அல்டோ தர்மே மற்றும் வனாத்தே சத்து ஆகியோரும் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்றதாக கொண்ட ரஞ்சி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொலை செய்ததாக ஆல்டோ தர்மா மீதும், கடந்த காலத்தில் வனத்தேவில் நடந்த பல கொலைகள் தொடர்பாக வனத்தே சத்து மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..