சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி அறிவழகனின் கதி கலங்கும் காணொளி
அண்மையில் சாள்ஸ் அன்ரனி என்றழைக்கப்படுகின்ற அறிவழகன் என்பவரின் உணர்ச்சிகரமான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் 19 ஆண்டுகள் போராடிய முன்னாள் போராளியான அறிவழகன் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தள காணொளி ஊடாக வெளியிப்படுத்தியிருந்தார்.
அவர் அந்த காணொளியில் , நான் தற்பொழுது மதுபான டின்களை சேகரித்து வாழ்கிறேன். தாங்க முடியாத மன வேதனையின் காரணமாக நான் குடிகாரனாக மாறியுள்ளேன். தலைவர் எங்களை இப்படி வளர்க்கவில்லை. மதுபான டின்களை சேகரித்தா நாங்கள் வாழ வேண்டும். நான் குடிகாரனாக மாறியதற்குக் காரணம் இந்த போராளிகள் தான்.
ஒவ்வொரு போராளிகளும் என்னிடம் நேரில் வந்து பேசட்டும். அப்போது நான் அவர்களிடம் கதைக்கிறேன். நீங்கள் யாருக்காக பணம் அனுப்புகின்றீர்கள்? எங்களுடைய இனத்திற்காகவா? இல்லை என்றும் பல கருத்துக்களை ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..