அயர்லாந்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை: மின்சாரம் துண்டிப்பால் பலர் பாதிப்பு
அயர்லாந்தில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
டொனேகல் கவுண்டியில் மணிக்கு 130கி.மீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று மதியம் வரை செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வேல்ஸில் 138 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகின்றமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பயண தடைகளும் ஏற்பட்டுள்ளன.
மின்சாரம் செயலிழந்துள்ளமையால் டொனேகல், கார்க், வெக்ஸ்ஃபோர்ட் மற்றும் கெர்ரி முழுவதும் 26,000 வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோகம் தொடர்பான அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதனால் வெள்ள எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளதுடன் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam