யூனிஸ் புயலின் கோரத்தாண்டவம்! - லண்டன் உள்ளிட்ட இடங்களில் 14 பேர் பலி
யூனிஸ் புயல் காரணமாக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பா முழுவதும் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, போலந்து, ஐரிஷ் குடியரசு மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பஇறப்புகள் பதிவாகியுள்ளன.
மில்லியன் கணக்கான வீடுகள் மற்றும் வணிகங்கள் ஐரோப்பா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து இணைப்புகள் முற்றிலும் சீர்குழைந்துள்ளன.
இதனிடையே, வட கடலில் காணாமல் போன 26 வெற்று கப்பல் கொள்கலன்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக டச்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கையில் ஹெலிகாப்டர்கள் மற்றும் அவசர இழுவைக் கப்பலைப் பயன்படுத்துவதாக டச்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மரங்கள் விழுந்ததில் பலர் இறந்தனர், நெதர்லாந்தில் நான்கு பேர், போலந்தில் இரண்டு பேர் தங்கள் கார்கள் மீது மரங்கள் விழுந்ததால் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியில் இருவர் உயிரிழந்ததுடன், இங்கிலாந்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பெல்ஜியத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.