கைது வேட்டையை நிறுத்துக! - சுமந்திரன் வலியுறுத்து
"போராட்டக்காரர்களுக்கு எதிரான கைது வேட்டையை, அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும்." என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்..
அவ்வாறு இல்லாவிட்டால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
"இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட
போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போராடும்
உரிமையை எவரும் தடுக்க முடியாது" என்றும் சுமந்திரன் எம்.பி.
சுட்டிக்காட்டினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.