ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் சஜித் கண்டனம்

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Politician Sri Lanka Cabinet Sri Lankan Peoples
By Rakesh Aug 04, 2022 11:58 AM GMT
Report

அரசியல் உள்நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டு வரும் கைது வேட்டையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடன் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்று(4) சென்றுள்ளார்.

அவரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,"அமைதியாகவும், நாகரிகமாகவும், உழைக்கும் மக்களுக்காகவும், ஆசிரியர் சமூகத்துக்காகவும் போராடிய ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள போது அடக்குமுறையின் தந்தையான மகிந்த ராஜபக்ச ஆரோக்கியமாகப் பொழுதைக் கடத்திக்கொண்டிருக்கின்றார்.

ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் சஜித் கண்டனம் | Stop The Hunt Together Sajith Urges Ranil

ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

மனிதநேயத்தின் பெயரால் நாடு குறித்து சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் எதேச்சதிகாரமாக அரசியல் பழிவாங்கள்களில் ஈடுபடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன். தற்போது வரை தொடரும் வன்முறைச் சுழற்சிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவே காரணமாவார்.

ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் சஜித் கண்டனம் | Stop The Hunt Together Sajith Urges Ranil

வெடிகுண்டுகள், வாள்கள், துப்பாக்கி ரவைகள் போன்ற ஆயுதங்களால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

மனித உரிமை மீறல்

எந்தவொரு குடிமகனும் தான் கருதும் கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதற்காக முன் நிற்கவும், பேசவும், ஒன்று கூடவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமையுண்டு.

ஜோசப் ஸ்டாலின் கைது தொடர்பில் சஜித் கண்டனம் | Stop The Hunt Together Sajith Urges Ranil

வன்முறையற்ற அஹிம்சை வழியில் போராடும் உரிமையை யாராலும் மீற முடியாது. ஜோசப் ஸ்டாலின் தனக்குள்ள உரிமைகளை நாட்டுக்காக ஜனநாயக முறையில் பயன்படுத்தியுள்ளார். அந்த உரிமையை எவராலும் எதிர்க்க முடியாது”என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அன்று அவர் கைது செய்யப்பட்ட போது ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தால், இன்று அது அவ்வாறு இழக்கப்படாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகல மக்களுடனும் இணைந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்! சுமந்திரன் பகிரங்க எச்சரிக்கை
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US