கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்: விரைவில் புதிய சட்டம் நடைமுறை
சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்வதை நிறுத்துவதற்கு விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்குமூலங்களை இணையத்தில் பதிவு செய்வதற்கும் நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (19) காலை ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
புதிய சட்டம்
இன்று முற்பகல், சட்டத்தரணியாக மாறுவேடமிட்ட துப்பாக்கிதாரி ஒருவர், நடந்து வரும் வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு வந்திருந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்றார்.
இந்தநிலையில் புதிய சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |