இலங்கையில் ஆபத்தான நபருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு - பொலிஸார் எச்சரிக்கை
புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் சில தரப்பினரால் சமூக ஊடகங்களில் பல்வேறு ஆதரவு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்த பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம் பாலாவி பகுதியில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கருதப்படும் இளைஞனின் தோற்றம் மற்றும் ஆளுமை குறித்து சில தரப்பினர் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மோசமான குற்றவாளி
சமூக ஊடகங்களில் மோசமான குற்றவாளி தொடர்பாக பரவும் சாதகமாக கருத்து குறித்து இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில் “குற்றவாளிகள் குற்றவாளிகள் தான்.. அவர்கள் தோற்றத்தாலோ அல்லது உடைகளாலோ அடையாளம் காணப்படுவதில்லை. அத்தகைய குற்றவாளிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் குறித்து அவதானமாக இருங்கள்.” பதிவிட்டுள்ளனர்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri