இலங்கைக்கான 12 திட்டங்களின் நிதியளிப்பை திடீரென நிறுத்திய நிறுவனம்
முன்னதாக அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய விஸ்தரிப்புக்காக ஜப்பானிய தாய்சேய் நிறுவனத்துக்கான நிதியை ஜெய்க்கா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜெய்க்கா நிறுவனம், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஜப்பானின் 12 திட்டங்களுக்கான நிதியை ரத்துச்செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச நாடுகளிடம் இலங்கை பெற்ற கடன்கள்
இலங்கை, சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனம், இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வரும் வரையிலேயே இந்த நிதி
தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜெய்க்கா நிதியம் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர்
நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam