ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுப்பதை நிறுத்துங்கள்! தமிழர்களிடம் அரசு வேண்டுகோள்
"அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக்காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கையை நிறுத்துமாறு அவர்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சர்வதேசத்திடம் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் பேரணி முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்த பின்னர் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசுக்கு எதிராகவும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பெரும் எடுப்பில் போராட்டங்களை நடத்துவது வழமை.
ஆனால், இம்முறை இந்தப்போராட்டங்கள் உச்சமடைந்துள்ளன.அரசையும் பெரும்பான்மையினத்தவர்களாக இருக்கும் சிங்களவர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam