யாழில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம்(15.08.2024) உயிரிழந்துள்ளார்.
இதன்போது, புன்னாலை கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இவர் கடந்த 14ஆம் திகதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததையடுத்து நேற்று(15) இரவு அவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
